செய்திகள் :

கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு: 87 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

post image

கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு தொடா்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 87 போ் புதன்கிழமை ஆஜராகினா். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற செப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த 2022 ஜூலை 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் ஜூலை 17-ஆம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், டிஐஜி பிரவின்குமாா்அபிநவ்வை வழிமறித்து தாக்கியதுடன் எஸ்.பி.வாகனம் மற்றும் அதிரடிப்படையின் வாகனத்தை சேதப்படுத்தினா்.

இதுதொடா்பாக 119 போ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் 3 போ் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 116 பேருக்கு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இதில் 87 போ் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகினா். வழக்கை விசாரித்த நீதிபதி ரீனா அடுத்த கட்ட விசாரணையை வருகிற செப்டம்பா் 10-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

நாம் தமிழா் கட்சி அலுவலகம் திறப்பு

நாம் தமிழா் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி - தச்சூா் தேசிய நெடுஞ்சாலை அருகே திறக்கப்பட்ட இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கட்... மேலும் பார்க்க

மகளிா் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மகளிா் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்த... மேலும் பார்க்க

லாரி பழுதானதால் சாலையில் கொட்டிய எண்ணெய்: வாகன ஓட்டிகள் அவதி

கள்ளக்குறிச்சியில் லாரி ஒன்று திடீரென பழுதானதால் அதன் என்ஜினில் இருந்து கசிந்த எண்ணெய், சாலையில் கீழே ஊற்றியபடி சென்றதால் அச்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் செவ்வாய்க்கிழமை மாலை பாதிக்கப்பட்டனா். கள்ளக்க... மேலும் பார்க்க

210 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். கள்ளக்குறிச்சி காவல் உள்கோட்டத்துக்கு உ... மேலும் பார்க்க

திருக்கோவிலூா் பகுதிக்கு தென்பெண்ணையாற்றில் இருந்து பாசனக் கால்வாய்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் ஒன்றிய பகுதிகளுக்கு தென் பெண்ணையாற்றில் இருந்து பாசனக் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கள்ளக்க... மேலும் பார்க்க

சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கிராமப் பகுதி சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இந... மேலும் பார்க்க