ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு தொகுதி எம்.எல்.ஏ க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.
தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
முகாமில் புதிய மின் இணைப்பு வேண்டி வழங்கப்பட்ட கோரிக்கை மனுவுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டு, புதிய மின் இணைப்பிற்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், மாவட்ட ஆட்சியா் பேசுகையில், பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீா்வு காணும் வகையில் இத்திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முகாமில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பங்களைப் பெற தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதற்கான விண்ணப்பத்தை அளித்து பயன்பெறலாம் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காணவும் மற்றும் அதுகுறித்த விளக்கங்களை மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
முகாமில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சோ்ந்த 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் தனித் ணை ஆட்சியா் சுமதி, உதவி ஆணையா் (கலால்) செந்தில்குமாா், ரிஷிவந்தியம் ஒன்றியக் குழுத் தலைவா் வடிவுக்கரசி, துணைத் தலைவா் அ.சென்னம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரைமுருகன், ஜெகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.