மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
வெயில், புழுதி, அறுவைச் சிகிச்சை... மோனிகா பாடலுக்காக பூஜா ஹெக்டே உருக்கம்!
நடிகை பூஜா ஹெக்டே மோனிகா பாடலுக்காக தான் பட்ட கஷ்டங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தில் நடிகர்கள் ரஜினி, ஆமிர் கான், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் இருந்து வெளியான மோனிகா லிரிக்கல் விடியோ சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் மட்டுமே 1.6 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல் இன்ஸ்டாவிலும் பலரும் ரீல்ஸ் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் பூஜா ஹெக்டே மோனிகா பாடல் குறித்து பதிவிட்டதாவது...
மோனிகா பாடலுக்காக ரசிகர்களின் அன்புக்கு நன்றி. மோனிகா பாடல் என்னுடைய சினிமா வாழ்க்கையில் உடல் ரீதியாக மிகவும் கடினமான பாடலாகும்.
அதீத வெப்பம், சூரியன் சுட்டெரித்தால் தோளில் பழுப்பு நிற வரிகள் பல மாதங்களுக்கு இருக்கும்... இதையெல்லாம் எதிர்த்து இந்தப் பாடலுக்கு நடனமாடினேன்.
ஈரப்பதம், புழுதி, கொப்புளங்கள், வேகமான நடன அசைவுகள் (என்னுடைய தசைநார் கிழிவுக்குப் பிறகு முதல் நடனம் இது) இருந்தன. இவைகளுக்கு மத்தியில், கிளாமராகவும் கஷ்டப்படாமலும் ஆடியாக வேண்டும்.
நான் என்னுடைய அனைத்து முயற்சிகளையும் மோனிகா பாடலுக்காகக் கொடுத்திருக்கிறேன். திரையில் பார்க்கும்போது நிச்சயமாக சரவெடியாக இருக்குமென நான் உறுதியளிக்கிறேன்.
என்னுடன் நடனமாடிய துணை நடனக் கலைஞர்கள் எனக்கு உற்சாகம் அளித்தார்கள். குறிப்பாக மகாசிவராத்திரி அன்று நான் விரதம் இருந்த சமயத்தில் ஊக்கமளித்தார்கள். நீங்கள் அனைவருமே அற்புதமானவர்கள் எனக் கூறியுள்ளார்.