செய்திகள் :

`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை

post image

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது.

இந்நிலையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி திரு. சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், போதைப் பொருள்கள் விற்பவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் திரு. சுந்தரேசன் அவர்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

700 பேரை சிறைக்கு அனுப்பியவர்

அனுமதியின்றிச் செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களை மூடியதோடு, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியவர்.

அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, கடந்த ஆண்டு, திமுக அரசின் காவல்துறையின் தவறுகளைக் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்குப் பழிவாங்குவதற்காக, அவரை மயிலாடுதுறைக்கு பணிமாற்றம் செய்தது திமுக அரசு.

தற்போது, மீண்டும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகள், திமுக அரசில் பணியாற்ற முடியாது என்பதையே இது காட்டுகிறது. காவல்துறை என்பது மக்களுக்கானது. மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உடனடியாக, டி.எஸ்.பி. திரு. சுந்தரேசன் அவர்களது அரசு வாகனம் திரும்ப வழங்கப்பட வேண்டும். திமுக அரசின் அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாமல், தமிழகக் காவல்துறையின் தலைவர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள், தமிழகக் காவல்துறையினரின் தன்மானத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று திமுக அரசை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

UK: "இனி 16 வயது முதல் வாக்களிக்கலாம்" - தேர்தலில் புதிய மாற்றங்களுக்கு என்ன காரணம்?

இங்கிலாந்தில் அடுத்த பொதுத்தேர்தல் முதல், வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 16-ஆக தளர்த்தி் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராணுவம் முதல் பல இடங்களில் பணியாற்றும் 16,17 வயது இளைஞர்களுக்க... மேலும் பார்க்க

'கூட்டணி ஆட்சிதான்.. அமித்ஷா கூறுவதே வேத சத்தியம்' - எடப்பாடியை மீண்டும் மீண்டும் சீண்டும் அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவராக 2021-ல் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் தி.மு.க-வின் ஊழல் குறித்து மட்டும் பேசிவந்தார், அண்ணாமலை. திடீரென கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க குறித்தும் பேசத் தொடங்கினார். ஒருகட்... மேலும் பார்க்க

`கூட்டணி ஆட்சிதான்; அமித் ஷா கூறுவதே வேதசத்தியம்; மாற்றுக் கருத்து இருந்தால்..!' - அண்ணாமலை

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவும்- பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் குறித்து இருதரப்பினரிடையேயும் ஒரு வித சலசலப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. அமித் ஷா தமிழகத்... மேலும் பார்க்க

காமராஜர் விவகாரம்: 'குளிர்காய நினைக்கும் தீயவர்களுக்கு இடம் கொடுக்காதீர்' - ஸ்டாலின்

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரைப் பற்றி பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.காமராஜர் அத... மேலும் பார்க்க

கழுகார்: குட்கா பிசினஸில் மோதிக்கொள்ளும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் டு மெளனம் காத்த இலைக் கட்சி நிர்வாகி

மோதிக்கொள்ளும் ஆளுங்கட்சி நிர்வாகிகள்!குட்கா பிசினஸில் போட்டி...பின்னலாடை நகரத்தில், வடமாநிலத் தொழிலாளர் அதிகம் என்பதால் அவர்களைக் குறிவைத்து சட்டவிரோத குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது. அந்தச்... மேலும் பார்க்க

`நோய் பாதித்த தெரு நாய்களைக் கருணைக் கொலை' - கேரள அரசின் அதிரடி முடிவு; காரணம் என்ன?

கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் மரணமடையும் அதிர்ச்சி சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் தெரு... மேலும் பார்க்க