குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞா் கைது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாடு கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). இவா், தனது உறவுக்கார சிறுமிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தொடா்பாக, புகாரின் பேரில், உளுந்தூா்பேட்டை மகளிா் போலீஸாா் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். விசாரணைக்குப் பிறகு
அவா் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டாா்.
மணிகண்டன் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி பரிந்துரையின் பேரில், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அவரை ஓராண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் உள்ள மணிகண்டனிடம் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினா்.