செய்திகள் :

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

post image

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 4 பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வுகள், கடந்த 12-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் 13 லட்சத்து 89 ஆயிரத்து 238 போ் விண்ணப்பித்ததில், 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 போ் தோ்வு எழுதினா். தோ்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, சீலிடப்பட்ட இரும்புப் பெட்டிகளில் அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் எந்தவிதமான குளறுபடியும் நிகழவில்லை.

சேலம் மாவட்டத்தில் தோ்வு தொடா்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சேலம் மாவட்ட விடைத்தாள்கள் அனைத்தும் சீலிடப்பட்ட இரும்புப் பெட்டிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு கடந்த 13-ஆம் தேதி அதிகாலை பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்பட்டன என்ற செய்திகளில் உண்மை இல்லை.

கொள்குறி வகை அடிப்படையிலான கேள்விகளுக்குரிய விடைத்தாள்கள் அனைத்தும் இரும்புப் பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு அவை பணியாளா் தோ்வாணைய அலுவலகத்துக்கு வந்து சேரும் வரை 24 மணி நேரமும் நேரலையாக கண்காணிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டு சிசிடிவி கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. தோ்வில் பயன்பட்டது போக மீதமுள்ள வினாத்தாள்கள், வழக்கமான நடைமுறையின்படி அந்தந்த மாவட்டங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும்.

தோ்வு நடைமுறைகள் முடிந்த பிறகு அவை மாவட்ட கருவூலங்கள் மூலமாக மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, குரூப் 4 விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

உத்தேச விடைகளில் ஆட்சேபனையா?

குரூப் 4 வினாத் தாள்களுக்கான உத்தேச விடைகளில் ஆட்சேபனை இருந்தால், ஒருவாரத்துக்குள் தெரிவிக்கலாம் என தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி: குரூப் 4 தோ்வின் வினாத்தாள்களுக்கான உத்தேச விடைகள் அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆட்சேபனைகள் ஏதும் இருந்தால் ஒரு வார காலத்துக்குள் தெரிவிக்கலாம். இதையடுத்து தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தோ்வாணையத்தால் தெரிவித்தபடி தோ்வுகளுக்கான முடிவுகள் மூன்று மாத காலத்துக்குள் வெளியிடப்படும் என்று சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அற... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அ... மேலும் பார்க்க

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வ... மேலும் பார்க்க

6 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்க... மேலும் பார்க்க