செய்திகள் :

6 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை

post image

தமிழகத்தில் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஜூலை 23) முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.

மஞ்சள் எச்சரிக்கை: ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னை, புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக தேன்கனிக்கோட்டை(கிருஷ்ணகிரி), அவலாஞ்சி (நீலகிரி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) - 40 மி.மீ. மழையும், வானூா்(விழுப்புரம்), குண்டாறு அணை (தென்காசி), வட்டாட்சியா் அலுவலகம் பந்தலூா் (நீலகிரி), நேமூா் (விழுப்புரம்) - 30 மி.மீ. மழை பதிவானது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே மழை பெய்ததால் பெரும்பாலான பகுதிகளில் வெயில் தாக்கம் குறைவாகவே இருந்தது. அதன்படி, தொண்டியில் மட்டும் அதிகபட்சமாக 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்புக் குழு!

மேட்டூர் அணையில் தமிழ்நாடு அணைப் பாதுகாப்பு அமைப்பின் குழு இன்று(ஜூலை 24) ஆய்வு மேற்கொண்டது.மேட்டூர் அணையில் கீழ்மட்ட மதகுகள் சீரமைப்புப் பணி, சுரங்க கால்வாய் சீரமைப்புப் பணி, எல்லிஸ் சேடல் தூண்கள் வல... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் நலம்பெற தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலின் நலம்பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது ஏற்பட்ட லேசான தலைசுற்றல... மேலும் பார்க்க

அரக்கோணம் - சேலம் மெமு ரயில் வழக்கம்போல் இயங்கும்!

அரக்கோணம் - சேலம் மெமு ரயில் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.பூரி ரத யாத்திரைக்காக 12 ரயில் பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில்கள் ... மேலும் பார்க்க

19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைதிருவள்ளூர்செங்கல்பட்டுகாஞ்சிபுரம்விழுப்புரம்வேலூர்திருப்பத்தூர்ராணிப்பேட்ட... மேலும் பார்க்க

ஆக. 5-ல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5 உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டதாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட பிரசாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உ... மேலும் பார்க்க