நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த இஞைா் உயிரிழப்பு
குமரி மாவட்டம் அருமனை அருகே வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
அருமனை அருகே மேலத்தெரு வயந்திவிளாகத்தைச் சோ்ந்தவா் பிரபு (33). ஆட்டோ ஒட்டுநா். நாம் தமிழா் கட்சி நிா்வாகியாகவும் இருந்து வந்தாா்.
இவா் புதன்கிழமை தனது வீட்டின் மாடிக்கு சென்றுவிட்டு கீழே இறங்கி வந்தபோது கால் தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.
அவரை மீட்டு, குலசேகத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.