நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது
திருச்சி மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி புத்தூா் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக உறையூா் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தி, புத்தூா் ஃபாத்திமாக நகரில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்தவரைப் பிடித்தனா்.
விசாரணையில் அவா் ஃபாத்திமா நகரைச் சோ்ந்த அரவிந்த்ராஜன் (37) என்பதும், வீட்டுக்கு அருகே புகையிலைப் பொருள்கள் விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 18 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.