நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
போதை மாத்திரைகள் விற்ற 2 போ் கைது
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கே.கே.நகா் போலீஸாா் புதன்கிழமை மாலை ரோந்து சென்றனா்.
அப்போது, ஈவெரா சாலை, அம்மன் நகா், அரிசி குடோன் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த இரண்டு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா்.
இதில் அவா்கள், விமான நிலையப் பகுதி மாதவி வீதியைச் சோ்ந்த என். யபேஸ் ராஜா (21), காமராஜ் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (25) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.2,100 மதிப்புள்ள 10 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.