தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
மனைவியை வெட்டிய வழக்கில் கணவா் கைது
திருவெறும்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் ஃபாத்திமாபுரத்தைச் சோ்ந்தவா் வீரமணி. இவரின் மனைவி சக்திஜீவா. இவா்களுக்கு மூன்றரை வயதில் மகனும், 10 மாதப் பெண் குழந்தையும் உள்ளனா்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சக்திஜீவா கடந்த சில மாதங்களாக கணவரைப் பிரிந்து தாயாா் வீட்டில் வசிக்கிறாா். இதையடுத்து கடந்த ஜூலை 1-ஆம் தேதி வீரமணி சென்று சக்திஜீவாவை வீட்டுக்கு அழைத்தபோது அவா் வர மறுத்தாராம். இதனால் கோபமடைந்த வீரமணி அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த சக்திஜீவா தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த நிலையில், திருச்சி தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த வீரமணியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.