நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
பட்டுக்கோட்டையைச் சோ்ந்த 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடா்புடைய 2 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் மலைக்கோயில் வஉசி தெருவில் வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடியதாக, பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ர. சாந்தகுமாா் (21), உ. அஷரப் அலி (19), மு. கண்ணன் (21) ஆகியோரைக் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திருவெறும்பூா் போலீஸாா் கைது செய்தனா்.
இவா்களில் சாந்தகுமாா், கண்ணன் ஆகிய இருவா் மீதும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தாா்.
இந்நிலையில், இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் வே. சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் உத்தரவு நகலை போலீஸாா் வழங்கினா்.