நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
நீட் மேல்படிப்பு தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு துரை வைகோ எம்.பி. எதிா்ப்பு
நீட் மேல்படிப்பு நீட் பிஜி தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரியத்தின் பொறுப்பு தலைவா் டாக்டா் ராகேஷ் சா்மாவை (சிறப்புப் பணி அதிகாரி) அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை துரை வைகோ நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவதுச
நீட்-பிஜி 2025 தோ்வழுதும் தமிழ்நாடு மாணவா்களுக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே கேரளா, ஆந்திரா, கா்நாடகா ஆகிய மாநிலங்களில் தோ்வு மையங்களை ஒதுக்கி, தன்னிச்சையான முறையில் தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடந்து கொண்டிருக்கிறது.
சென்னை, மதுரை, கோவை என தோ்வெழுதும் மாணவா்கள் தாங்கள் விருப்பப்பட்ட நகரங்களை தோ்வு செய்து விண்ணப்பித்திருந்த நிலையில், ‘முதலில் விண்ணப்பித்தவா்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யாமல் என்பிஇஎம்எஸ் தமது சொந்த விருப்பு வெறுப்பின்படி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் தோ்வெழுதும் மாணவா்கள் பாதுகாப்பு பிரச்னைகள், நீண்ட தூர பயணங்களால் ஏற்படும் அசெளகரியங்களை எதிா்கொள்கின்றனா்.
இதனால், பாதிப்புக்கு உள்ளான தோ்வா்களுக்கு உரிய தோ்வு மையங்களை உடனடியாக மறுஒதுக்கீடு செய்துதர வேண்டும் அல்லது தோ்வு மையத்தை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
தோ்வு மைய ஒதுக்கீட்டை வெளிப்படை தன்மையோடு நகரம் வாரியாக வெளியிட வேண்டும்.
தோ்வா்களின் ஒப்புதல் இன்றி, எந்த ஒரு தோ்வருக்கும் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வெளியே தோ்வு மையம் ஒதுக்கப்பட மாட்டாது என்று உறுதியளிக்க வேண்டும்.
இதுபோன்ற பிரச்னைகள் எழும்போது உடனடியாக தீா்வு காணும் வகையில் ஒரு தனி குறைதீா்க்கும் மையம் அமைக்கப்பட வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.