பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது லாரி மோதல்
தில்லி மதுரா சாலையில் வெள்ளிக்கிழமை காலையில் நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது லாரி மோதியது.
இது ஒரு சிறிய மோதல் என்றும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.
அமிட்டி சா்வதேச பள்ளி சாகேத் பேருந்தில் மாணவா்கள் யாரும் இல்லை என்றும், லாரி மோதியபோது ஒரு காவலாளி மட்டுமே அதில் ஏறியதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
‘மதுரா சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்தில் ஒரு லாரி லேசாக மோதியது. சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் பள்ளிக் குழந்தைகள் யாரும் இல்லை’ என்று தில்லி காவல்துறை அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
‘மோதல் சிறியது என்றும், இதுவரை எந்த புகாரும் வராததால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றும் போலீஸாா் தெளிவுபடுத்தியுள்ளனா்.