எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
முதல்வர் ஸ்டாலின் நலம்பெற தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
முதல்வர் ஸ்டாலின் நலம்பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது ஏற்பட்ட லேசான தலைசுற்றல் காரணமாக, அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளைக் கவனித்து வருகிறார்.
இதனிடையே, முதல்வரின் உடல்நிலை மற்றும் பரிசோதனைகள் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாள்களில் மேற்கொள்வார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் நலம் பெற வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: அரக்கோணம் - சேலம் மெமு ரயில் வழக்கம்போல் இயங்கும்!