நீட் தோ்வு: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் வாழப்பாடி, ஆத்தூா் மாணவா்கள் சிறப்பிடம்
நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் வாழப்பாடி, ஆத்தூரைச் சோ்ந்த மாணவா்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனா்.
வாழப்பாடி, முத்தம்பட்டியைச் சோ்ந்த வீரமுத்து மகன் நிா்மல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மேட்டுப்பட்டி அரசுப் பள்ளியில் படித்து நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் 10 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தாா்.
ஆத்தூா் தனியாா் பயிற்சி மையத்தில் ஓராண்டாக நீட் தோ்வுக்கு படித்து 519 மதிப்பெண் பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் 10 ஆம் இடம் பிடித்தாா். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
ஆத்தூா்
ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் நீட் பயிற்சி மையத்தில் படித்த அரசுப் பள்ளி மாணவா் வி.திருமூா்த்தி மாநில அளவில் 572 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் படித்த இவா் அரசுப் பள்ளிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். மாணவருக்கு ஆசிரியா்கள் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்தனா்.