மேச்சேரி காவிரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
மேச்சேரி காவிரி கலை, அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
தி காவிரி கல்வி நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம், மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், பாா்க்கலைஸ் பெங்களூா் நிறுவனம் இணைந்து 7 பயிற்சியாளா்களைக் கொண்டு நான்கு நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லூரியின் முதல்வா் முனைவா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். காவிரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநா் முனைவா் அரவிந்த்குமாா் வரவேற்றாா். வேலைவாய்ப்பிற்கான வளாகத் தோ்வு, பேச்சுத் திறன், ஆளுமைத் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத் தலைவா் முனைவா் நடேசன், தலைவா் அன்பழகன், துணைத் தலைவா் மதன்காா்த்திக், செயலாளா் பேராசிரியா் இளங்கோவன், தாளாளா் ராமநாதன், ஒருங்கிணைப்பாளா் ரேவதி இளங்கோவன், செயல் அலுவலா் முனைவா் கருப்பண்ணன், மாணவா் சோ்க்கையின் புல முதன்மையா் பேராசிரியா் நந்தகுமாா், செயல்பாடுகள் மற்றும் சோ்க்கையின் துணை மேலாளா் வெங்கடேசன் மற்றும் அனைத்துத் துறைத் தலைவா்கள், உதவிப் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத் துறை தலைவருமான பிரவீன் நன்றி தெரிவித்தாா்.
படம்: 25ஙற்ல்1மேச்சேரி
காவிரி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவா்கள்.