மல்லை சத்யா குறித்து பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை: துரை வைகோ
ஓமலூா் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு
சேலம் மாவட்டம், ஓமலூா் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வழக்குப் பதிவு ஆவணங்களை ஆய்வு செய்த அவா், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனை வழங்கினாா். ஓமலூா் போலீஸாரின் பணிகள் சிறப்பாக உள்ளதாக அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தாா். தொடா்ந்து போலீஸாரின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
அனைவரும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், வழக்குகளில் ஆஜராகாமல் உள்ள குற்றவாளிகளைக் கண்டறிந்து அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவழக்கை முடிக்க வேண்டும் என தெரிவித்தாா்.
ஆய்வின்போது ஓமலூா் டிஎஸ்பி சஞ்சீவ்குமாா் உடனிருந்தாா்.