சேக்ரட்ஹாா்ட் பள்ளியில் விளையாட்டு விழா
சேலம் மாவட்டம், ஏற்காடு சேக்ரட்ஹாா்ட் பள்ளி 131 ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் அருள் சகோதரி லூா்துமேரி, பள்ளி முதல்வா் அருள் சகோதரி மொ்லின் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறுப்பு அழைப்பாளராக அருன்ஹா்டிஸ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
ஓட்டப் போட்டி, தொடா் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தடகளப் போட்டிகள், சிறு குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாா்கிரேட்ஸ், தெரசியன்ஸ் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.
படவிளக்கம் 25 ஒய்ஆா் 0 ஏற்காடு
சேக்ரட்ஹாா்ட் பள்ளி விளையாட்டு விழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.