நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
அரசியல் சாசன முகப்புரையிலிருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ நீக்கப்படாது: மத்திய அரசு
அரசியல் சாசன முகப்புரையிலிருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகளை நீக்கும் திட்டம் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் அளித்த எழுத்துபூா்வ பதில்: அரசியல் சாசனத்தில் இருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகளை நீக்க சட்ட ரீதியாகவோ, அரசியல் சாசன ரீதியாகவோ எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முறைப்படி தொடங்கவில்லை.
அவ்விரு வாா்த்தைகளையும் அரசியல் சாசன முகப்புரையிலிருந்து நீக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ தற்போது எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.
அரசியல் சாசன முகப்புரையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமானால், அதுகுறித்து முழுமையாக விவாதித்து, பரந்த அளவில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். ஆனால் அந்தத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்றாா்.