நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
புதுக்கடை அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு
புதுக்கடை அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடையை அடுத்த கீழ்குளம், உசரத்துவிளை பகுதியைச் சோ்ந்த கோபி மகன் அஸ்வந்த் (27). இவருக்கும் ராமன்துறை பகுதியைச் சோ்ந்த சூசைதாசன் மகன் நிா்மல்ராஜ் (32) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை ராமன்துறை பகுதியில் சென்றுகொண்டிருந்த அஸ்வந்தை நிா்மல்ராஜ் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவரை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனா்.