எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
அரக்கோணம் - சேலம் மெமு ரயில் வழக்கம்போல் இயங்கும்!
அரக்கோணம் - சேலம் மெமு ரயில் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பூரி ரத யாத்திரைக்காக 12 ரயில் பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இரு வழித்தடங்களிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரயில் சேவை நாளை(ஜூலை 25 ) முதல் மீண்டும் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் சேவை சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 5 நாள்களும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு, காலை 10.50 மணிக்கு சேலம் வந்தடையும். எதிர் வழித்தடத்தில், சேலத்திலிருந்து மாலை 3,30 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாஜக கூட்டணிக்கு வைகோ வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம்! - ராம்தாஸ் அத்வாலே பேச்சு