`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; ...
Numbeo: பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா! - எத்தனையாவது இடம்?
Safety Index (பாதுகாப்பு குறியீடு) என்பது ஒரு இடத்தின் பாதுகாப்பு நிலையை அளவிடும் ஒரு கணக்கீட்டு மதிப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், நாடு அல்லது பகுதியின் குற்றச் செயல்கள், காவல்துறை செயல்பாடு, மக்களின் பாதுகாப்பு உணர்வு போன்ற தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
குறிப்பாக கொள்ளை, திருட்டு, தாக்குதல் போன்ற குற்றவியல் நிகழ்வுகள் இல்லாமை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு, இரவில் தனியாக வெளியே செல்லும் போது பாதுகாப்பு, காவல்துறையின் செயல்திறன், போதைப்பொருள் தொடர்பான பிரச்னைகள், ஊழல் மற்றும் அரசியல் பாதுகாப்பு போன்றவைகள் மூலம் இந்த மதிப்பீடு அளவிடப்படுகிறது.
இதன் அடிப்படையில், Numbeo 2025-ம் ஆண்டின் நடுத்தர காலமான ஜூன், ஜூலை மாத உலக நாடுகளின் பாதுகாப்பு நிலைகளை மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், UAE - 85.22 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், அந்தோரா (Andorra) - 84.83 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும், கத்தார் (Qatar) - 84.64 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கின்றன.
இலங்கை - 57.7 புள்ளிகள் பெற்று 61-வது இடத்திலும், பாகிஸ்தான் - 57.6 புள்ளிகள் பெற்று 62-வது இடத்திலும், இந்தியா - 55.8 புள்ளிகள் பெற்று 67-வது இடத்திலும் இருக்கின்றன. அதே நேரம் இங்கிலாந்து - 51.6 பெற்று 86-வது இடத்தையும், அமெரிக்கா - 50.8 புள்ளிகள் பெற்று 91-வது இடத்தையும் பெற்றிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...