``முடி மாற்று சிகிச்சைக்கு பின் உடலுறவு கூடாது'' - மருத்துவ விதிமுறையை மீறிய இளைஞர் சோகம்..
வேல்ஸைச் சேர்ந்த இளைஞர் ரூபன் ஓவன், துருக்கியில் உள்ள கிளினிக்கிற்கு மாடலிங் செய்ய சென்றுள்ளார். அங்கு `இலவசமாக முடி மாற்று அறுவை சிகிச்சை' செய்வதாக கூறியதால் சம்மதித்து அவரது தலையை கொடுத்துள்ளார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அவர் மருத்துவர்களின் அறிவுரையை ஒரு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமல் மீறி விட்டார்.
டெய்லி ஸ்டார் செய்தியின்படி, `அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு வியர்வை ஏற்படுத்தும் கடுமையான செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்' என்று ரூபனிடம் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், உடற்பயிற்சி, சூரிய ஒளியில் உடலை காய வைப்பது மற்றும் உடலுறவு ஆகியவற்றிற்கு கட்டுப்பாடுகளை மருத்துவர் கூறியுள்ளனர்.

ஆனால், 'உடலுறவு தவிர்க்க வேண்டும்' என்று மருத்துவர் கூறியதை அந்த இளைஞர் மீறிவிட்டார். இதனால் முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
காலையில் எழுந்தபோது முகம் வீங்கியதைக் கண்டு பயந்த ரூபன், தனக்கு பாலியல் நோய் தொற்று (STI) ஏற்பட்டிருக்குமோ என்று பயந்து, உடனடியாக கூகுளில் தேடினார்.
அந்த இளைஞர் "நான் உடலுறவு குறித்த அறிவுரையை முழுமையாகப் பின்பற்றவில்லை," என்று தனது தவறை உணர்ந்து, மருத்துவர்களின் அறிவுரையைப் புறக்கணித்தற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.