செய்திகள் :

``எனக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகணும்னு கனவு ஆனா..." - ஆட்டோ டிரைவரின் வைரல் வீடியோ! - என்ன சொல்கிறார்?

post image

'புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்' என்ற வாசகத்தை உயிர்பிக்கும் சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் இன்ஃப்லியன்ஸர் அபினவ் மயிலவரபு ஹைதராபாத்தில் வீட்டுக்குச் செல்ல ஆட்டோவை வாடகைக்கு எடுத்திருக்கிறார். செல்லும் வழியில் ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக்கொடுக்கிறார். அப்போது ஆட்டோ டிரைவர் 'COMPUTER' என்ற வார்த்தைக்கு புல் பார்ம் என்ன? இதற்கு பதிலளித்தால் இந்த சவாரிக்கு காசுத் தரத் தேவையில்லை" எனக் கேட்கிறார்.

ஆட்டோ டிரைவர்
ஆட்டோ டிரைவர்

அபினவ் சிறிது நேரம் யோசித்துவிட்டு, 'தெரியவில்லையே' என பதிலளிக்கிறார். உடனே ஆட்டோ டிரைவர், ``Commonly Operated Machine Purposely Used for Trade, Education and Research இதுதான் COMPUTER என்ற வார்த்தையின் முழு வடிவம். கல்விதான் சம்பாதிக்க வைக்கும். சம்பாதித்தல் உங்களுக்கு எதையும் கற்றுத் தராது. ஆங்கிலம், Political Science ஆகிய இரண்டு முதுகலை பட்டம் பெற்றவன். எனக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது கனவு. அதற்காக தயாராகிக்கொண்டிருந்தேன். ஆனால் வாழ்க்கை எனக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தது.

திடீரென்று, என் குடும்பத்தார் எனக்கு திருமண ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகள் பிறந்தனர். என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. நான் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன். எனக்கு ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, உருது, தமிழ், மலையாளம் என ஏழு மொழிகள் தெரியும். என் முஸ்லிம் நண்பர்கள் நான் முஸ்லிம்களைப் போலவே சரளமாக உருது பேசுகிறேன் எனக் கூறுவார்கள். கார்ப்பரேட் வேலைகளை விட்டபோதும், நிறைவேற்ற முடியாத கனவுகள் இருந்த போதிலும் இப்போதும் நான் பார்க்கும் இந்த வேலையில் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்.

கார்ப்ரேட் வேலையில் அதிக சம்பளம் கொடுப்பார்கள். ஆனால், அதற்காக உங்களை முழுமையாக உறிஞ்சி எடுத்து சக்கையாக்கிவிடுவார்கள்" என கடந்தக் காலம் முதல் நிகழ்கால சூழல் வரை அனைத்தையும் பேசி சிரிக்கிறார்.

இந்தக் காணொளியை சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த அபினவ், ``வெறும் 15 நிமிடங்களில், ஏழு மொழிகள் தெரிந்த, இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்ற, ஒரு காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று இலக்கு வைத்திருந்த ஒருவரை சந்தித்தோம்… எந்தப் பாடப்புத்தகத்தையும் விட வாழ்க்கைத் தத்துவங்களைப் போகிற போக்கில் பகிர்ந்து கொண்ட ஒருவர்” எனத் தெரிவித்திருக்கிறார்.

``முடி மாற்று சிகிச்சைக்கு பின் உடலுறவு கூடாது'' - மருத்துவ விதிமுறையை மீறிய இளைஞர் சோகம்..

வேல்ஸைச் சேர்ந்த இளைஞர் ரூபன் ஓவன், துருக்கியில் உள்ள கிளினிக்கிற்கு மாடலிங் செய்ய சென்றுள்ளார். அங்கு `இலவசமாக முடி மாற்று அறுவை சிகிச்சை' செய்வதாக கூறியதால் சம்மதித்து அவரது தலையை கொடுத்துள்ளார். அற... மேலும் பார்க்க

``வீட்டில் என்னை துன்புறுத்துகிறார்கள், யாராவது உதவுங்கள்'' - கதறி அழுத பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பாலிவுட்டில் ஆஷிக் பனாயா ஆப்னே உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்க... மேலும் பார்க்க

Microbiota Vault: பேராபத்தைத் தடுக்க மனித மலத்தை சேமிக்கும் விஞ்ஞானிகள்! - காரணம் என்ன?

மனித மலம், புளித்த உணவுகள் போன்றவற்றை சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) பல்கலைக் கழகம் சேமித்து வருகிறது. இந்த சேமிப்புக்குப் பின்னணியில் பெரும் திட்டமும், தேவையும் இருப்பதாக விஞ்ஞானிகளும், ஆய்வாளர்கள... மேலும் பார்க்க

Numbeo: பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா! - எத்தனையாவது இடம்?

Safety Index (பாதுகாப்பு குறியீடு) என்பது ஒரு இடத்தின் பாதுகாப்பு நிலையை அளவிடும் ஒரு கணக்கீட்டு மதிப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், நாடு அல்லது பகுதியின் குற்றச் செயல்கள், காவல்துறை செயல்பாடு, மக்களி... மேலும் பார்க்க

``ஆட்டோ டிரைவர்தான் என்னிடம் முதலில்..." - வைரலான வீடியோ குறித்து சினேகா மோகன்தாஸ் விளக்கம்

நடிகரும், எம்.பி-யுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மகளிர் அணி நிர்வாகியாக இருப்பவர் சினேகா மோகன்தாஸ் (32). ஃபுட் பேங்க் இந்தியா (உணவு வங்கி) என்ற அறக்கட்டளையின் நிறுவனராகவும் இருக்கும் இவ... மேலும் பார்க்க

`விமான அவசரம்' - பயணத்தில் மனைவியை மறந்துவிட்டு சென்ற அமைச்சர் சிவராஜ் சிங்.. என்ன நடந்தது?

பயண அவசரத்தில் டிக்கெட்டை எடுக்காமல் சென்றுவிடுவதைப்பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் பயண அவசரத்தில் தனது மனைவியையே மறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தி... மேலும் பார்க்க