குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு
"முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமித் ஷாவிடம் தான் கேட்க வேண்டும்!" - டி.டி.வி.தினகரன்
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,
"வரும் தேர்தலில் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பெயர்களை குறிப்பிடும் போது அ.ம.மு.க பெயரை குறிப்பிடாதது குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு பதில் கூற முடியாது. இது குறித்து யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் தான் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் குறித்து அரசியல் கட்சி தலைவராக கருத்து கூறுவது நாகரிகமாக இருக்காது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. தி.மு.க ஆட்சி அமையும் பொழுதெல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டு தான் போகும். தி.மு.க-வை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது, கூட்டு மந்திரி சபை தான் அமையும். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அதிகாரம் பெறும் வகையில் மக்கள் முடிவெடுப்பார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமித்ஷா விடம் தான் கேட்க வேண்டும். தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நாங்கள் நேரம் கேட்கவில்லை. எங்கள் கூட்டணி மேலும் வலுவடையும். கூட்டணி வலுவடைவதை பார்த்து தி.மு.க-வினருக்கு அச்சம் வந்து விட்டது. அன்வர் ராஜா எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் பயணித்தவர். அவர் தி.மு.க-விற்கு சென்றது எனக்கு வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில தனி நபர் வருமானம் உயர்ந்ததற்கு காரணம் இந்தியா முழுவதும் நிகழ்ந்த வளர்ச்சி தான்" என்றார்.