செய்திகள் :

Pawan Kalyan: "சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன்; ஆனால்..." - பவன் கல்யாண் ஓபன் டாக்

post image

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துணை முதல்வராக இருந்துகொண்டே 'Hari Hara Veera Mallu' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுவே 'பவன் மக்கள் பணியில் இல்லை கவனம் செலுத்துவதில்லை' என்ற விமர்சனத்தை கிளப்பின.

ஆந்திரா மாநில எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், "பவன் கல்யாண் சினிமா ஷூட்டிங்கில்தான் இருக்கிறார். அவ்வப்போது அரசியல் பக்கம் வந்து சர்ச்சைகளைக் கிளப்பிவிடுவதுதான் அவரது வேலை" என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

'Hari Hara Veera Mallu' திரைப்படம் நாளை திரையரங்களில் வெளியாகவிருக்கும் நிலையில் தன் மீதான விமர்சனங்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் பவன் கல்யாண், "அரசியலுக்கு வருவதற்கு முன்பே மூன்று திரைப்படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டேன். ஆனால், அரசியல் பணி தீவிரமாக இருந்ததால் அந்த மூன்று திரைப்படங்களையும் என்னால் நடிக்க முடியாமல் போனது. அதற்காக சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு அந்த மூன்று திரைப்படங்களிலும் நடித்துக் கொடுக்க முடிவு செய்தேன்.

எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் படப்பிடிப்புக்குச் சென்றேன். அதற்குள் இவ்வளவு விமர்சனங்கள் என்மீது வைக்கிறார்கள். இம்மூன்று திரைப்படங்களையும் முடித்துவிட்டு முழுமையாக அரசியல் பணியைப் பார்ப்பேன். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தினாலும் நிறுத்துவிடுவேன்.

சினிமாதான் எனக்கான வருமானம். அதனால், நடிப்பதை நிறுத்திவிட்டு திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியைச் செய்வேன். மக்கள் சேவைக்காக அரசியல், வருமானத்திற்காக சினிமா என்பதுதான் நான் தேர்வு செய்த பாதைகள்" என்று பேசியிருக்கிறார் பவன் கல்யாண்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Rashmika: 'டியர் டைரி' என்ற வாசனைத் திரவிய பிராண்டை தொடங்கிய நடிகை; விலை என்ன தெரியுமா?

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது முதல் தொழில்முனைவு முயற்சியாக 'டியர் டைரி' என்ற வாசனைத் திரவிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிராண்ட், அவரது தனிப்பட்ட நினை... மேலும் பார்க்க

Hari Hara Veera Mallu: "ஔரங்கசீப்பைப் பற்றிப் பேசவில்லை; ஆனால்,.." - பவன் கல்யாண் சொல்வது என்ன?

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் இம்மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பவன் ... மேலும் பார்க்க

Pawan Kalyan: "ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்ததுதான் நான் செய்த ஒரே தவறு!" - பவன் கல்யாண் பளீச்

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரி ஹர வீரமல்லு' படம், நாளை மறுநாள் (ஜூலை 24) வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பவன் கல்யாண் பங்கேற்க... மேலும் பார்க்க

Peddi Update: "RRR படத்தை விட..." - ராம் சரணின் முறுக்கேறிய உடல், நீண்ட முடி, பிரமாண்ட திட்டம்!

'உபேன்னா' படத்தை இயக்கிய இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், சிவ ராஜ்குமார், ஜான்வி கபூர் போன்றோர் 'பெத்தி' படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.... மேலும் பார்க்க

Pawan Kalyan: ``திரைப்படங்களைப் பற்றி பேசுவதற்கு தயங்குவேன்; அது ஆணவம் கிடையாது.." - பவன் கல்யாண்

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரி ஹர வீர மல்லு' இம்மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஹரி ஹர வீரமல்லு படத்தில்...இந்தப் படத்தின் ப்ரோம... மேலும் பார்க்க

`சலூன் கடைக்காரர் மகன் டு ஆஸ்கர் பாடல்' - ராகுலுக்கு ரூ.1கோடி ஊக்கத்தொகை அறிவித்த தெலங்கானா முதல்வர்

RRR திரைப்படத்தில் வெளியாகி ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடல் மூலம் பிரபலமடைந்த பாடகர் ராகுல் சிப்லிகுஞ்சுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளித்து அறிவித்துள்ளார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி. மிக... மேலும் பார்க்க