செய்திகள் :

எந்த அளவுக்குக் குடிக்கலாம்.. மதுபாட்டிலில் குறிப்பிடக் கோரிய மனு தள்ளுபடி

post image

சென்னை: எந்த அளவுக்கு மது குடிக்கலாம் என்பதை மதுபாட்டிகளில் குறிப்பிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மது பாட்டில்களில் மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு என குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த அளவு மதுவைக் குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிடும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக்கூறி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ஏ.ஸ்ரீதரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து படிப்படியாக பூரண மதுவிலக்கைக் கொண்டு வர சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் வாங்கப்படும் மது பாட்டில்களில் எந்த அளவுக்கு குடிக்கலாம் என்பதை குறிப்பிட வேண்டும். மதுவால் ஏற்படும் குடும்ப வன்முறை சம்பவங்கள், குழந்தையின்மை, இளம் விதவைகள் அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், இதுதொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவுக்கு பதில் அளிக்கப்பட்டுவிட்டது. மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மது பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மது பாட்டில்களில் மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு என குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த அளவு மது குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிடும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆக. 2-ல் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 1,556 முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், சென்னையில் மட்டு... மேலும் பார்க்க

சென்னையில் 4 இடங்களில் விரைவில் ஏசி பேருந்து நிறுத்தம்! எங்கெங்கு?

சென்னையில் புதிதாக நான்கு இடங்களில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை மாநகராட்சி வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.8 கோடியில், இந்த... மேலும் பார்க்க

வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ... மேலும் பார்க்க

தீபாவளிக்கு புடவை: ஜெயலலிதா வழியில் இபிஎஸ்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு, பெண்களுக்கு நல்ல புடவை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் இன்று விவசாய... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்ட அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உடல்நிலையில் ம... மேலும் பார்க்க