`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; ...
அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஜூலை 23) முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.
ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, நீலகிரி, திருவண்ணாலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய 15 மாவட்டங்களில் புதன்கிழமை காலை (ஜூலை 23) பத்து மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை தொண்டியில் மட்டும் அதிகபட்சமாக 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.