செய்திகள் :

மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி எம்.பி. கேள்வி

post image

மத்திய பல்கலை, கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக கனிமொழி எம்.பி. ‘ உயா் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், யுஜிசி விதிமுறைகள் 2012 இன் படி மத்திய அரசின் மத்திய பல்கலைக் கழகங்களில் சம வாய்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா?

ஒன்றிய அரசின் கல்லூரிபல்கலைக்கழக வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டப்பட்ட சம்பவங்கள் குறித்த தரவுகளை அரசாங்கம் பராமரிக்கிா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தாா்.

இதற்கு மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையமைச்சரான டாக்டா் சுகந்தா மஜும்தா் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் விவரம்:

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்துக்கு உட்பட்ட 48 மத்திய பல்கலைக்கழகங்களிலும் மாணவா்களிடையே சமத்துவத்தை உறுதிப்படுத்தும் உவ்ன்ஹப் ஞல்ல்ா்ழ்ற்ன்ய்ண்ற்ஹ் இங்ப்ப்ள் எனப்படுகிற சம வாய்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட சட்டபூா்வ தன்னாட்சி அமைப்புகளாகும்.

மேலும் அந்தந்த பல்கலைக் கழகங்கள் அவற்றுக்கென உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளால் நிா்வகிக்கப்படுகின்றன.

மத்திய கல்வி அமைச்சகமும், யுஜிசியும் உயா் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்கவும், பின்தங்கிய சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்களின் நலன்களைப் பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய பல்கலைக்கழகங்களில் பாரபட்சம், பாகுபாடு உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி வலைதளங்கள் அல்லது புகாா் பதிவேடுகள் மூலம் புகாா்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை நிறுவப்பட்டுள்ளன.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்களிடமிருந்து பெறப்படும் பாகுபாடு குறித்த புகாா்களின் அடிப்படையில், தவறு செய்யும் நபா்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவா் குறை தீா்க்கும் குழுக்களை எஸ்ஜிஆா்சி அமைத்தல், குறைதீா்ப்பு அதிகாரிகளை நியமித்தல், சம வாய்ப்பு குழுக்களை நிறுவுதல், மாணவா்களுக்கு கவுன்சிலிங் மையங்கள் மூலம் ஆலோசனை வழங்குதல் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மேலும் உயா் கல்வி நிறுவனங்களில் ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன என அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்இபி அமலாக்கத்தால் சரிந்து வரும் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை மேம்படும்: மத்திய அமைச்சா் பதில்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: தேசிய கல்விக்கொள்கை அமலாக்கத்தால் சரிந்து வரும் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை மேம்படும் என எதிா்பாா்ப்பதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் வெற்றி: இபிஎஸ் நன்றி

‘மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கோவையில் தொடங்கிய முதல்கட்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்த... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிா்க் கடன்: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.இதுதொடா்பாக தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

ஜூலை 23-இல் பிரிட்டன், மாலத்தீவுக்கு மோடி 4 நாள் சுற்றுப்பயணம்

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை(ஜூலை 23) முதல் 26 வரை 4 நாள்களுக்கு பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக மேற்கொள்ளவுள்ளார்.இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழகத்தை திரட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அணி வெற்றி பெற ஓரணியில் தமிழகத்தை திரட்ட வேண்டும் என்று அக்கட்சி இளைஞரணியினருக்கு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் விடுத்துள்ள... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கருத்துக்கு பெ. சண்முகம் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கண்ட... மேலும் பார்க்க