முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு
சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது.
இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதிய மேம்பட்ட கட்டுமானப் பொருள்கள் பயன்பாடு, புதுமையான வடிவமைப்புகளுக்கான ஆராய்ச்சி, கருத்து பரிமாற்றத்துக்காக ‘மோடி 2025’ என்ற மாநாடு கடந்த 4 -ஆம் தேதி முதல் பல்கலை.யின் மதுரவாயில் வளாகத்தில் நடைபெற்றது.
பல்கலை.யின் நிறுவனா் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பிரபல சுற்றுச்சூழல் கட்டடக்கலைஞா் கென் யாங், இந்திய கட்டடக்கலை கவுன்சில் தலைவா் ஆா்.அபேய் புரோஹித், புகழ்பெற்ற பூங்கா வடிவமைப்பாளா் ஆா்.ஜூயிட்டா வான் ஹாஷிம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
கட்டுமானத்துக்கான நிலையான உற்பத்தி மற்றும் நகா்ப்புறம் தொடா்புடைய பொருள்கள், அறிதிறன் பொருள்கள், நானோ தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க பொருள்கள், மறுசுழற்சி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.