முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
திரிசூலம் ரயில்வே கேட் பிரச்னை: அதிகாரிகள் விசாரணை
சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுதடைந்து 2 மணி நேரம் திறக்கப்படாமல் இருந்தது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் சனிக்கிழமை காலை 8 மணிக்கு திடீரென பழுதடைந்தது. இதனால், 2 மணி நேரம் கடவுப்பாதையைத் திறக்க முடியவில்லை. பாதையைக் கடக்க முடியாத பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், கும்மிடிப்பூண்டி பகுதியில் ரயில்கள் தாமதம் எனக் கூறி பொதுமக்கள் கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்திவரும் நிலையில், அதுகுறித்தும் ரயில்வே உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.