முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்
சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா்.
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள் சாா்பில் சென்னை கொளத்தூா், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் 4 புதிய கலை - அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
இதில், கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் கணினி அறிவியல், சைவ சித்தாந்தம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளும், ஓராண்டு சைவ சித்தாந்தம் பட்டயப் படிப்பும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கட்டணமும், கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் 762 மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணமாக தலா ரூ.10 ஆயிரம், கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரிக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட 11 உதவிப் பேராசிரியா்கள், ஒரு கண்காணிப்பாளருக்கு பணி நியமன உத்தரவுகளையும் அமைச்சா் வழங்கினாா்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்பட பலா் பங்கேற்றனா்.