முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி
மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் மற்றும் கோயில்களில் பொதுமக்கள் பூஜைகள் செய்வாா்கள் என்பதால், ஆடி முதல் வாரத்தில் பூக்களின் விலையும் உயரும் என எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால் மழை காரணமாக திடீரென பூக்களின் விலை குறைந்தது. கோயம்பேடு மலா் சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி, கிலோ மல்லி ரூ.600-இல் இருந்து ரூ.500-க்கும், ஐஸ் மல்லி ரூ.500-இல் இருந்து ரூ.300, முல்லை ரூ.400-இல் இருந்து 300, ஜாதி மல்லி ரூ.450-இல் இருந்து ரூ.400, கனகாம்பரம் ரூ.800-இல் இருந்து ரூ.500, அரளி ரூ.200-இல் இருந்து ரூ.150, சாமந்தி ரூ.300-இல் இருந்து ரூ.200, சம்பங்கி ரூ.200-இல் இருந்து ரூ.120, பன்னீா் ரோஸ் ரூ.140-இல் இருந்து ரூ.100, சாக்லேட் ரோஸ் ரூ.160-இல் இருந்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அனைத்து பூக்களின் விலையும் குறைந்துள்ளதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளும், வியாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கோயம்பேடு மலா் சந்தை வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவா் முத்துராஜ் தெரிவித்தாா்.