செய்திகள் :

மோடியின் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் யாருக்கு சாதகம்?! கார்கள், விஸ்கி விலை குறையுமா?

post image

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறார். பிரிட்டனில் மேற்கொள்ளப்படும் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களால் யாருக்கு சாதகம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் பயணத்தில் முதல்கட்டமாக, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மரின் அழைப்பின்பேரில் பிரதமர் மோடி அந்நாட்டுக்கு 2 நாள்கள் பயணமாக புதன்கிழமை செல்கிறார். இது பிரதமர் மோடியின் 4-வது பிரிட்டன் பயணம் என்றாலும், ஸ்டார்மர் பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்த முக்கியமான பயணத்தில், இந்தியா-பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையொப்பமிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் இங்கிலாந்து பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது ஒரு சிறப்பம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டனுக்கான இந்திய ஏற்றுமதியில் 99 சதவிகித வரிகள் பூஜ்ஜியமாக மாற்றப்படும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் 90 சதவிகித பொருள்களுக்கு வரிகள் குறைக்கப்படும்.

இந்தியாவில் இருந்து துணிகள், காலணிகள், ரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகியவை 4- 16 சதவிகிதத்திலிருந்து வரிகளை முழுமையாக ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரிகளை இந்தியா தற்போதுள்ள 100 சதவிகிதத்திலிருந்து வெறும் 10 சதவிகிதமாகக் குறைக்கும் என்று கருதினால், ஆஸ்டன் மார்ட்டின் மற்றும் டாடாவுக்குச் சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற கார்களின் விலை குறையவும் வாய்ப்பிருக்கிறது.

இங்கிலாந்து பொருள்களின் மீதான இறக்குமதி வரிகளை குறைப்பதற்கு ஈடாக, இந்திய கார் தயாரிப்பாளர்கள் மின்சார, ஹைபிரிட் வாகனங்களுக்கான பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் சந்தையை எதிர்நோக்குவார்கள். இதனால், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா எலக்ட்ரிக் போன்ற கார் தயாரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும். வணிகர்கள், யோகா பயிற்றுனர்கள், சமையல்காரர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு தற்காலிக விசா வழங்குதல் போன்றவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வெல்ஸ்பன் இந்தியா, அரவிந்த், ரேமண்ட், வர்த்மான் போன்ற இந்திய ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் இங்கிலாந்துக்கான ஏற்றுமதிக்கான வரி இல்லாமல் பயனடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாட்டா இந்தியா மற்றும் ரிலாக்ஸோ போன்ற காலணி தயாரிப்பாளர்களும் எளிதாக இங்கிலாந்து மார்க்கெட்டை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக ஸ்காட்ச் விஸ்கி மீதான இறக்குமதி வரி 150 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாகக் குறையும். பின்னர் அடுத்த பத்தாண்டுகளில் 40 சதவிகிதமாகவும் குறைக்கப்படவுள்ளது.

Cars, whisky, and more: Who gains what as India, UK to sign deal during PM Modi's visit

இதையும் படிக்க :ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எதிர்க்கட்சியினர் தொடர் அமளி! நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கிய... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்! பணிகளைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவக் காரணங்களுக்காக அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன... மேலும் பார்க்க

பிரிட்டன் புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரிட்டன் நாட்டுக்கு இன்று(ஜூலை 23) புறப்பட்டார்.பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி... மேலும் பார்க்க

குழந்தை நீ.. உனக்கு என்ன தெரியும்? தேஜஸ்வி கேள்விக்கு நிதிஷ் குமார் பதில்!

பிகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவின் கேள்விக்கு முதல்வர் நிதிஷ் குமார் காட்டமாக பதிலளித்துள்ளார்.பிகார் சட்டப்பேரவைக்கு வெளியே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததுக்கு எத... மேலும் பார்க்க

பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிரத்தில் நடந்த கொலை! காட்டிக் கொடுத்த டைல்ஸ்!

பாபாநாசம் படத்தில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாமல் பூமிக்கு அடியில் புதைக்கப்படும் சம்பவத்தையே விஞ்சும் வகையில், மகாராஷ்டிரத்தில், தனது கணவரைக் கொன்று வீட்டுக்குள் குழிதோண்டி பு... மேலும் பார்க்க

ரூ.29 லட்சம் வரி! தெருவோர வியாபாரிகளுக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் பலருக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு வருமான வரிதுறையிடமிருந்த வந்திருக்கும் நோட்டீஸ் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆண்டு மு... மேலும் பார்க்க