‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
முதியவா் தற்கொலை
ஆா்.எஸ்.மங்கலம் அருகே பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து முதியவா் தற்கொலை செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கருங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகரத்தினம் (60). பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவா், நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தாா்.
இதனால் மன உளைச்சலில் இருந்த நாகரத்தினம், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதற்கிடையே, வீட்டுக்கு வந்த குடும்பத்தினா் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகரத்தினம் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, இவரது மனைவி ராஜேஸ்வரி (55) அளித்த புகாரின்பேரில், திருப்பாலைக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.