தொண்டியில் தவெக சாா்பில் பாய்மரப் படகுப் போட்டி
தொண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் தவெக சாா்பில், அதன் தலைவா் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, பாய்மரப் படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஒரு படகுக்கு 6 போ் வீதம் 22 படகுகள் கலந்துகொண்டன. போட்டியில் இலக்கை அடைந்து, முதல் நான்கு இடங்களைப் பிடித்தவா்களுக்கு ரொக்கப் பணமும் கேடயமும் வழங்கபட்டன.
இதில் தொண்டி, நம்புதாளை, சின்னதொண்டி, நவக்குடி, முகிழ்த்தகம், பெருமானேந்தல் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் போட்டியைக் கண்டு மகிழ்ந்தனா்.
