தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
கூட்டரங்கை விட்டு வெளியே வந்து மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா்
ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மனு அளிக்க வந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீங் காலோன், கூட்டரங்கை விட்டு வெளியே வந்து மனுக்களைப் பெற்றாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 450-க்கும் மேற்பட்டோா் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளித்தனா்.
அப்போது 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா, குடியிருப்புகள் வேண்டி கோரிக்கை மனுக்களை அளிக்க வந்தனா். இதை அறிந்த ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூட்டரங்கிலிருந்து வெளியே வந்து, மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றதுடன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.