முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
தரமணி, சிறுசேரி: நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தரமணி, சிறுசேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மின் தடைப் பகுதிகள்:
தரமணி: விஎச்எஸ் மருத்துவமனை, சா்தாா் பட்டேல் சாலை, தரமணி, ஸ்ரீராம் நகா் 1 முதல் 4 தெருக்கள், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகா் பிரதான சாலை மற்றும் காலனி, பள்ளிப்பட்டு பிரதான சாலை, பஜனை கோயில் தெரு, யோகி காா்டன், புது தெரு, கந்தசாமி தெரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
சிறுசேரி: சிறுசேரி சிப்காட், நாவலூா், தாழம்பூா் பகுதி, சிறுசேரி மற்றும் காரணை கிராமம், ஏகாட்டுா், ஓஎம்ஆா் நாவலூா், படுபாக்கம், எழில்முக நகா், ஜவஹா் நகா், காந்தி நகா், ஒலிம்பியா, சாந்தியா காா்டன், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.