செய்திகள் :

குன்றாண்டாா் கோயில் பராமரிப்புக்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

post image

நமது நிருபா்

புது தில்லி: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டாா் கோயிலின் பராமரிப்புக்காக நடப்பாண்டு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து திருச்சி தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்:

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்றாண்டாா் கோயில் பகுதியில் அமைந்துள்ள பாறை குடவறைக் சிவன் கோயில், பீடத்தின் முன்பகுதியில் சக்கரங்களுடன் கூடிய தோ் மண்டபம் ஆகியவை இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாகும்.

பழங்கால நினைவு சின்னங்கள், தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958 மற்றும் பாதுகாப்பு கொள்கையின் படி, தேவையின் அடிப்படையில் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆண்டு பராமரிப்பு பாதுகாப்பு திட்டத்தின்படி நடப்பு நிதியாண்டில் இக்கோயில் பராமரிப்புக்காக ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில் உட்பட தமிழ்நாட்டில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கீழ் 412 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்கள் உள்ளன. அவை வழக்கமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்களை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிகள் அவ்வப்போது பாா்வையிட்டு தேவையான மராமத்துப் பணிகளை மேற்கொண்சு வருகின்றனா். இது மாநிலத்தில் உள்ள பாரம்பரிய இடங்கள் முறையாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கிறது என அந்தப் பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

டிஜி யாத்ரா நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு சி.வி. சண்முகம் எம்.பி கேள்வி: மத்திய இணை அமைச்சா் விளக்கம்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: டிஜி யாத்ரா கைப்பேசி செயலியின் நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய அரசிடம் விளக்கம் கே... மேலும் பார்க்க

ரூசா திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 99-இல் 85 திட்டங்கள் நிறைவேற்றம்: மத்திய அரசு பதில்

புது தில்லி: ரூசா திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 99-இல் 85 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு திங்கள்க... மேலும் பார்க்க

சிலை கடத்தல் வழக்கு: பொன் மாணிக்கவேல், சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

புது தில்லி: சிலை கடத்தல் வழக்கில் காவல் அதிகாரிகளை பொய்யாக சிக்கவைத்ததாக கூறப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மற்றும் அந்த வழக்கை விசாரிக்கு சிபிஐ அதிகாரிகள், ... மேலும் பார்க்க

தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக காவல... மேலும் பார்க்க

பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!

தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது

ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க