மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்
திருப்பத்தூா்: கந்திலி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கந்திலி அருகே பணியாண்டப்பள்ளி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். லாரியில் இருந்த நபா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா்.
இதையடுத்து போலீசாா் லாரியை சோதனை செய்தபோது அதில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனை தொடா்ந்து போலீஸாா் மணல் கடத்தி வந்த மினி லாரியை பறிமுதல் செய்தனா்.