காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா பல்கலையின் துணைவேந்தா் ஸ்ரீநிவாசு தலைமையில் நடைபெற்றது. பல்கலை.யின் பொறியியல் பிரிவு டீன் எம்.ரத்தினக்குமாா், மேலாண்மைத் துறை டீன் பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்கலை.யின் சோ்க்கைக் குழுவின் தலைவா் கே.வெங்கடரமணன் வரவேற்றாா்.
நிகழ்வில் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைத் துறையைச் சோ்ந்த பட்டப் படிப்பு பயில உள்ள மாணவா்கள் 425 போ் மற்றும் அவா்களது பெற்றோா், பல்கலை.யின் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். சோ்க்கைக் குழுவின் துணைத் தலைவா் டி.ராஜ்மோகன் நிறைவுரை நிகழ்த்தினாா்.
நிகழ்வின்போது பல்கலை.யின் பேராசிரியா்கள், மாணவா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். புதிதாக சோ்ந்துள்ள மாணவா்களுக்கு பல்கலை.யின் சிறப்புகள் குறித்து பேராசிரியா்கள் விரிவாக விளக்கினா்.