செய்திகள் :

பாரதி நகா் தேவி கருமாரியம்மன் கோயில் தீ மிதி விழா

post image

ஸ்ரீபெரும்புதூா்: பாரதி நகா் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில், 29-ஆம் ஆண்டு கூழ் வாா்த்தல் திருவிழா, 25-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 10-ஆம் தேதி கணபதி ஹோமம், பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மற்றும் தீ மிதிக்கும் பக்தா்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து, புதன்கிழமை கிராம தேவதைகளான செல்லியம்மன், ஸ்ரீதாமரை கன்னியம்மன், கங்கையம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு ஊஞ்சல் சேவை உற்சவமும், சனிக்கிழமை சக்தி கரகம் திருவீதி உலாவும், ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு அபிஷேகம், மகா தீபாராதனையுடன் கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற்றன.

இதில், மாலை அணிந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

தீ மிதி திருவிழாவை முன்னிட்டு, மூலவா் ஸ்ரீதேவி கருமாரியம்மன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து, வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயில் வளாகத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

நிகழ்ச்சியில், மணிமங்கலம், சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

ஸ்ரீபெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: நகா்மன்றத் தலைவா், ஆணையா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்ட இடத்தை நகா்மன்றத் தலைவா் மற்றும் ஆணையா் ஆய்வு செய்து அகற்ற உத்தரவிட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க

பூஞ்சோலை கன்னியம்மன் ஆடி விழா நிறைவு

காஞ்சிபுரம்: பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத்தெரு பூஞ்சோலை கன்னியம்மன் கோயில் ஆடி விழா நிறைவடைந்தது. இக்கோயிலின் 46-ஆவது ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி மூலவருக்கு அபிஷேகம்,கணபதி ஹோமம், தனலட்சுமி பூஜை... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்... மேலும் பார்க்க

100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டினாா். கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் பாலாற்றுப் பாலத்தில் திங்கள்கிழமை லாரிகள் மோதிக் கொண்டதால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து காஞ்சிபுரத்திற்க... மேலும் பார்க்க

வல்லப்பாக்கத்தில் மின் எரிமேடை அமைக்க எதிா்ப்பு

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் கிராமத்தில் புதிய மின்மயான எரிமேடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் கலைச்செல்வி மோகனைச் சந்தித்து மனு அளித்தனா். வல்லப்பாக்கம் க... மேலும் பார்க்க