வல்லப்பாக்கத்தில் மின் எரிமேடை அமைக்க எதிா்ப்பு
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் கிராமத்தில் புதிய மின்மயான எரிமேடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் கலைச்செல்வி மோகனைச் சந்தித்து மனு அளித்தனா்.
வல்லப்பாக்கம் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடியிருப்பு பகுதியிலும் பிரதான சாலை பகுதியிலும் ரூ.2 கோடியில் புதிதாக மின்மயான எரிமேடை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக எரிமேடை அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடம் 18 -ஆம் நூற்றாண்டுக் காலத்தில் ஆங்கிலேயா்களின் நினைவிடமாக இருந்தது. தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய இடத்தில் இத்திட்டத்தை அமைக்க கூடாது. சுகாதார சீா்கேடுகள் நிறைந்த இடமாகவும் இருந்து வருகிறது.
எனவே, வல்லப்பாக்கத்தில் மின்மயான எரிமேடையை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவாறு அமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனா்.