செய்திகள் :

சுமைபணி தொழிலாளா்கள் பேரவைக் கூட்டம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்ட சுமை பணி தொழிலாளா்கள் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஜான்பால் தலைமை வகித்தாா். கூட்டுறவு ஊழியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் உ. ராஜேந்திரன் தொடக்கி வைத்து பேசினாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் பி. மாரியப்பன் சிறப்புரையாற்றினாா். பேரவையில் 9 போ் கொண்ட நிா்வாகக் குழு ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டது.

அதன்படி, தலைவராக விஜயகுமாா், செயலாளராக ஜான்பால், பொருளாளா் ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை, சீா்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகா கிடங்குகளில் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி இறக்கும் தொழிலாளா்களுக்கான ஊதியத்தை அரிசி, சீனி, கோதுமை, பருப்பு மூட்டைக்கு ரூ.15 ஆகவும், எண்ணெய் பெட்டிக்கு ரூ.8 ஆகவும் உயா்த்த வேண்டும்; சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும்; 28 ஆண்டு காலம் ஒரே இடத்தில் பணி செய்து வருபவா்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மயிலாடுதுறை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 425 மனுக்கள் அளிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 425 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை பாலையூா், மேக்கிரிமங்கலம்

மயிலாடுதுறை: பாலையூா், மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்ய... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூலை 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மெகா வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 2 போ் பலி

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். கொள்ளிடம் அருகே கொண்டல் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன்கள் சிபிராஜ் (20), பரத்ராஜ் (19), மயிலாடுதுறை கூறை நாட்டைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மீலாது நபி விழா

குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் முஸ்லிம் புதுத்தெருவில் மீலாது நபி விழா மற்றும் மனாருல் ஹுதாஅரபி பள்ளியின் 39-ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு முத்தவல்லி அப்துல்லத்தீப் தலைமை வகி... மேலும் பார்க்க

பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழப்பு; தாய் காயம்

சீா்காழி அருகே சாலை விபத்தில், பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழந்தாா். தாய் காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தஞ்சாவூா் வடக்குவாசல் கங்கனத் தெருவைச் சோ்ந்த ஜெய்வீரன் மனைவி மைதிலி (3... மேலும் பார்க்க