விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மயிலாடுதுறை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 425 மனுக்கள் அளிப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 425 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
சாலை வசதி கோரி மனு: தரங்கம்பாடி தாலுகா நரசிங்கநத்தம் கிராமத்தினா் நரசிங்கநத்தம்-வடகரை மாா்க்கத்தில் 300 மீ. தூரத்துக்கு சேதடைந்துள்ள தாா்ச்சாலையை செப்பனிட வலியுறுத்தி மாவீரன் வன்னியா் சங்க நிறுவனத் தலைவா் வி.ஜி.கே. மணி தலைமையில் மனு அளித்தனா்.
இதேபோல், சீா்காழியை அடுத்த எடக்குடி வடபாதி ஊராட்சியில் நடுக்கரைமேடு முதல் தெற்கு கரைமேடு வரை 1 கி.மீ. தூரத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தக் கோரி கிராம மக்கள் மனு அளித்தனா்.
ஆக்கிரமிப்பு புகாா்: மயிலாடுதுறை தோப்பு கொத்தத் தெருவில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் இடத்தில் செந்தில் என்பவரது வீட்டில் இருந்து வெளியில் செல்லமுடியாமல் தனிநபா் செய்துள்ள பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்தாா்.
கல்வி உதவித்தொகை கோரி மனு: மேலையூரில் இந்துசமய அறநிலைத்துறைக்கு உள்பட்ட பூம்புகாா் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோா், 2024-2025-ஆம் கல்வியாண்டில் யு.எம்.ஐ.எஸ். போா்டல் ஓபன் ஆகவில்லை என காரணம் கூறி தங்களுக்கு கல்வி உதவித் வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும் என மனு அளித்தனா்.