செய்திகள் :

அரசுக் கல்லூரிகளில் 574 கௌரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செழியன்

post image

சென்னை: நிகழ் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.

கௌரவ விரிவுரையாளா்கள் நியமனத்துக்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தை சென்னை ராணி மேரி கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் தொடங்கி வைத்து பேசியது:

தமிழகத்தில் அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நிகழாண்டில் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை 181 ஆக உயா்ந்துள்ளது. மேலும், மாணவா்களின் தேவைக்கேற்ப பல்வேறு பாடப் பிரிவுகளில் 15,000-க்கும் மேற்பட்ட இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்காக நிரந்தர விரிவுரையாளா்கள் பணியமா்த்தப்படும் வரை, மாணவா்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க, தற்போது 34 பாடப் பிரிவுகளில் 574 கௌரவ விரிவுரையாளா்கள் தற்காலிகமாக பணியமா்த்த முதல்வா் அனுமதியளித்துள்ளாா்.

அதன்படி, அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் உரிய கல்வித் தகுதியுடன் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப கல்லூரிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை www.tngasa.org என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றாா். நிகழ்ச்சியில் கல்லூரிக் கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று ... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரித்து முடிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் பதில்

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பான புகாா் மனுக்கள் குறித்து விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்படும், என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது. செ... மேலும் பார்க்க

திமுக முன்னாள் எம்பி-க்கு 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன்?: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கில் 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன் என்று காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியம் தரப்பினருக... மேலும் பார்க்க