அரசுக் கல்லூரிகளில் 574 கௌரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செ...
அந்த கடைசி 5 ஓவர்கள் இருக்கே... ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு மிட்செல் மார்ஷ் புகழாரம்!
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே முழுமையாக வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 15 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் குறிப்பாக, கடைசி 16 பந்துகளில் 7 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
மிட்செல் மார்ஷ் புகழாரம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உண்மையில் மிகவும் சிறப்பாக இந்த டி20 தொடரை தொடங்கியுள்ளோம். மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால், கடைசி 5 ஓவர்களை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அபாரமாக வீசினர். பந்துவீச்சாளர்கள் மிகவும் அற்புதமாக செயல்பட்டு தங்களது திட்டங்களை துல்லியமாக செயல்படுத்தினர்.
அதிக டி20 கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தை அவர்கள் வெளிக்காட்டினர். இதுபோன்ற பந்துவீச்சு எப்போதும் உற்சாகத்தை தருவதாக இருக்கும். நாங்கள் தொடர்ச்சியாக இதேபோன்று செயல்படுவோம் என நம்புகிறேன். விக்கெட்டுகளை இழந்தபோதிலும், இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இதையும் படிக்க: 4-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவார்; உறுதிப்படுத்திய முகமது சிராஜ்!
Australian captain Mitchell Marsh has praised the bowlers for their excellent bowling performance.