செய்திகள் :

அறிமுகப் போட்டியில் அசத்திய மிட்செல் ஓவன்; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா!

post image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே முழுமையாக வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ராஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 39 பந்துகளில் 55 ரன்களும் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ஷிம்ரன் ஹெட்மேயர் 19 பந்துகளில் 38 ரன்களும் (2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சீன் அப்பாட், கூப்பர் கன்னோலி, நாதன் எல்லிஸ் மற்றும் மிட்செல் ஓவன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அறிமுகப் போட்டியில் அசத்தல்

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி, மேற்கிந்தியத் தீவுகளை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆஸ்திரேலிய அணியில் அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அறிமுக வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 6 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் மிட்செல் மார்ஷ் 24 ரன்கள் எடுத்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப் மற்றும் குடகேஷ் மோட்டி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அகீல் ஹொசைன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கி 50 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய மிட்செல் ஓவன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் சேர்ப்பு!

Australia won the first T20I against West Indies by 3 wickets.

4-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவார்; உறுதிப்படுத்திய முகமது சிராஜ்!

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதை முகமது சிராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இத... மேலும் பார்க்க

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 21) அறிவித்துள்ளது.நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரில் ... மேலும் பார்க்க

சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த மே.இ.தீவுகள் வீரர்கள்!

சர்வதேச டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் 1000 ரன்களைக் கடந்துள்ளனர்.ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான நிதீஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகி... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; வெளியேறியது ஜிம்பாப்வே!

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி2... மேலும் பார்க்க