சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகும் ‘கருப்பு’ டீசர்!
‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகவிருக்கிறது. இந்த தகவலை படக்குழு இன்று(ஜூலை 21) வெளியிட்டுள்ளது.
ஆர். ஜே. பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.